திமுக ஆட்சிக்கு வந்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீரமைக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் கும்மனூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், இன்னும் நான்கே மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்றார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டிய அவர், அந்த திட்டத்தை திமுக தான் வேகப்படுத்தியது என்றார்.
அதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் எடப்பாடி தொகுதியிலுள்ள குரும்பப்பட்டி ஊராட்சியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், பெண்களிடம் குறைகளை கேட்டார். அப்போது பேசிய அவர், தான் எம்ஜிஆரின் ரசிகன் என்றும், எம்ஜிஆர் படம் வந்தாலே தியேட்டருக்கு சென்று விடுவேன் என்றும் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிமுக ஆட்சியில் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.