மத்திய பட்ஜெட் குறித்து மாநில நிதியமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
Published : Jan 18, 2021 9:14 PM
மத்திய பட்ஜெட் குறித்து மாநில நிதியமைச்சர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
Jan 18, 2021 9:14 PM
மத்திய பட்ஜெட் குறித்து அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கான இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் இருந்தபடியே அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், காவிரி - குண்டாறு திட்டம் உள்ளிட்ட நீராதார திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதே போல மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.