​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அப்துல்கலாம் விட்டு சென்ற, தன்னம்பிக்கை என்ற பாரம்பரியம் தான் இன்று நமது விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி உருவாக்க தூண்டியது - வெங்கய்யா நாயுடு

Published : Jan 18, 2021 9:07 PM

அப்துல்கலாம் விட்டு சென்ற, தன்னம்பிக்கை என்ற பாரம்பரியம் தான் இன்று நமது விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி உருவாக்க தூண்டியது - வெங்கய்யா நாயுடு

Jan 18, 2021 9:07 PM

றைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் விட்டு சென்ற, தன்னம்பிக்கை என்ற பாரம்பரியம்தான், இன்று நமது விஞ்ஞானிகள் சொந்த தடுப்பூசி உருவாக்க தூண்டியுள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.   

ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்கை வரலாறு புத்தகத்தை,  அவரது அண்ணன் மகள் டாக்டர் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர் மற்றும் பிரபல விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த புத்தகத்தை சென்னையில் உள்ள ராஜ்பவனில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா  நாயுடு வெளியிட்டார். பின்னர் பேசிய வெங்கய்யா நாயுடு,  விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தற்சார்பு இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருமை உண்மையில் டாக்டர் அப்துல் கலாமை சேரும் என்று புகழாரம் சூட்டினார்.