​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானுக்கு தொடரும் பொருளாதார நெருக்கடி : சவுதி அரேபியாவைப் போல் ஐ.அ.அமீரகமும் நடவடிக்கை?

Published : Jan 18, 2021 9:01 PM

பாகிஸ்தானுக்கு தொடரும் பொருளாதார நெருக்கடி : சவுதி அரேபியாவைப் போல் ஐ.அ.அமீரகமும் நடவடிக்கை?

Jan 18, 2021 9:01 PM

வுதி அரேபியாவை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகமும், 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனடியாக திரும்ப செலுத்துமாறு பாகிஸ்தானை வலியுறுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றதும், அந்நாட்டுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்பட 43 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி உதவியை சவுதி அரேபியா அறிவித்தது. சவுதிக்கு மாற்றாக புதிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை பாகிஸ்தான் உருவாக்க முயன்றதால், கடனை உடனடியாக திரும்ப செலுத்த பாகிஸ்தானுக்கு சவுதி அரசு நெருக்கடி கொடுத்தது.

அந்த கடனை சீனாவிடம் இருந்து கடன் வாங்கி பாகிஸ்தான் செலுத்தி வருகிறது. அதே பாணியில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனடியாக செலுத்துமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.