​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் மல்லையாவுக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸ் குறித்து தகவல் தெரிவிக்க, சி.பி.ஐக்கு, மத்திய தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவு

Published : Jan 18, 2021 8:02 PM

விஜய் மல்லையாவுக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸ் குறித்து தகவல் தெரிவிக்க, சி.பி.ஐக்கு, மத்திய தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவு

Jan 18, 2021 8:02 PM

விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் நோட்டீசுகளை சி.பி.ஐ. வெளியிட்டது.
இந்த 2 வெவ்வேறு நோட்டீசுகளும் எந்த விதியின் கீழ் வெளியிடப்பட்டது என்று சி.பி.ஐ.யிடம் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த விகார் துர்வே என்ற தகவல் உரிமை சட்ட ஆர்வலர் விண்ணப்பித்தார்.

ஆனால், அந்த தகவலை அளிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டது. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் விகார் துர்வே விண்ணப்பித்தார். அவர் கேட்ட தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.