​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில் புதுமையான நடைமுறை - பிரதமர் மோடி

Published : Jan 18, 2021 7:19 PM

பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில் புதுமையான நடைமுறை - பிரதமர் மோடி

Jan 18, 2021 7:19 PM

பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு புதுமையான நடைமுறைகளை கையாள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பின் பேசிய அவர்,
மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்குவதே முந்தைய மற்றும் இப்போதை அரசுகளுக்கு இடையிலான வேற்றுமையை விளக்கும் மிகசிறந்த உதாரணம் என்றார்.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் 225 கி.மீட்டர் தூரத்திற்கு மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதாக கூறிய அவர், கடந்த 6 ஆண்டுகளில் 450 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்றார்.

27 நகரங்களில் 1000 கி.மீட்டர் தூர மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதாக அவர் கூறினார். முந்தைய ஆட்சியின் போது மெட்ரோ ரயில் போக்குவரத்தை மேம்படுத்த முற்போக்கு சிந்தனைகள் இல்லை என்ற அவர், இப்போது நகர பொது போக்குவரத்தை ஒருங்கிணைத்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.