​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடைக்கு சென்றுவர தாமதமானதால்....... சிறுவனுக்கு சூடு போட்டு கொடுமைப் படுத்திய மாமா!

Published : Jan 18, 2021 6:03 PM

கடைக்கு சென்றுவர தாமதமானதால்....... சிறுவனுக்கு சூடு போட்டு கொடுமைப் படுத்திய மாமா!

Jan 18, 2021 6:03 PM

கடைக்கு சென்றுவர தாமதமானதால் சிறுவனுக்கு சூடு போட்டு கொடுமைப் படுத்திய மாமாவை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கொச்சினை சேர்ந்த சிறுவன் தனது பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது அக்கா அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், அக்கா வீட்டில் தினமும் கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் வேலையை செய்து வந்துள்ளான். இந்த நிலையில் சமீபத்தில், அக்காவின் கணவரான பிரின்ஸ் என்பவர், சிறுவனை கடைக்கு அனுப்பி சில பொருட்களை வாங்கி வர சொல்லியுள்ளார். சிறுவனும் பொருட்களை வாங்க கடைக்கு சென்றார். ஆனால் கடையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வர சற்று நேரம் ஆகியுள்ளது.

’ஏன் இவ்வளவு நேரம், பக்கத்துல இருக்கற கடைக்கு போய்ட்டு வர, இவ்வளவு நேரமா?’ என கேட்டு அக்காவின் கணவர் பிரின்ஸ் சிறுவனை அடித்து உதைத்துள்ளார். மேலும் அயன் பாக்சில் சூடு வைத்துள்ளார். சிறுவனின் அலறுல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், பதறிய நிலையில், பிரின்ஸ் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வலியால் துடித்த நிலையில், சிறுவன் காணப்பட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அக்கா கணவர் பிரின்ஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவனுக்கு பிரின்ஸ் சூடு வைத்தது, இது முதல் முறை அல்ல எனவும், ஏற்கனவே இது போல பல முறை சூடு வைத்ததும் தெரியவந்தது. இதேப்போல குடித்துவிட்டு பல முறை சிறுவனை பிரின்ஸ் கொடுமைப்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதனைதொடர்ந்து பிரின்ஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை அக்காவின் கணவரே கொடுமைப்படுத்தி கைதான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.