பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக்குத் தடை கோரி வழக்கு : தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைக்கலாம் அல்லது சேனலை மாற்றிக் கொள்ளலாம் - நீதிபதிகள்
Published : Jan 18, 2021 6:00 PM
பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக்குத் தடை கோரி வழக்கு : தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைக்கலாம் அல்லது சேனலை மாற்றிக் கொள்ளலாம் - நீதிபதிகள்
Jan 18, 2021 6:00 PM
பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்குத் தடை கோரிய வழக்கில், மனுதாரருக்குத் தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொதிகைத் தொலைக்காட்சியில் டிசம்பர் 1 முதல் நாள்தோறும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிறது. இதற்குத் தடை விதிக்கக் கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி சுந்தரேஷ் அமர்வு, தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம் எனக் கருத்துத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.