விவசாயப் போராட்ட ஆதரவாளர்களுக்கு சம்மன் : என்ஐஏ அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
Published : Jan 18, 2021 5:58 PM
விவசாயப் போராட்ட ஆதரவாளர்களுக்கு சம்மன் : என்ஐஏ அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு
Jan 18, 2021 5:58 PM
விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் டெல்லியில் தேசியப் பாதுகாப்பு முகமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உணவும், தேவையான வசதிகளும் செய்து கொடுக்கும் அமைப்புகளின் நிர்வாகிகள், போராட்ட ஆதரவாளர்கள் 40 பேர் மீது வழக்குப் பதிந்துள்ள தேசியப் புலனாய்வு முகமை அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் தேசியப் புலனாய்வு முகமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் முன் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.