​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யார் வாட்ஸ்அப் வழக்கறிஞர்? யார் பேஸ்புக் வழக்கறிஞர்? மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி இடையே குழப்பம்

Published : Jan 18, 2021 5:21 PM

யார் வாட்ஸ்அப் வழக்கறிஞர்? யார் பேஸ்புக் வழக்கறிஞர்? மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி இடையே குழப்பம்

Jan 18, 2021 5:21 PM

டெல்லி உயர்நீதிமன்றத்தில் யார் வாட்ஸ்அப் வழக்கறிஞர், யார் பேஸ்புக் வழக்கறிஞர் என மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி இடையே குழப்பம் ஏற்பட்டது.

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகுல் ரோஹத்கி ஆஜரானார். அப்போது, குறுக்கிட்ட கபில் சிபல்,  நீங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு வழக்கறிஞர், வாட்ஸ்அப்புக்கு ஆஜராகும் பொறுப்பு தம்மிடம் இருப்பதாக கபில் சிபல் கூறினார்.

அப்படியா? தான் வாட்ஸ்அப் வழக்கறிஞர் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன் என முகுல் ரோஹத்கி கூறினார். இதையடுத்து, யார் வாட்ஸ்அப், யார் பேஸ்புக் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு, பாலிசி குழப்பம் பற்றி வாதிடுங்கள் என நீதிபதி சஞ்சீவ் சச்தேவா அறிவுறுத்தினார்.