கடந்த வருடம் கிறிஸ்துமஸ் லாட்டரியில் ரூ. 12 கோடி வென்ற ரப்பர் தொழிலாளி தொடர்ந்து, தான் ரப்பர் அறுக்கும் தொழிலை செய்து வருகிறார்.
கொல்லம் மாவட்டம் மாலூர் அருகேயுள்ள கைதாச்சல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு கேரள அரசின் கிறிஸ்துமஸ் பண்டிகை லாட்டரியில் ரூ. 12 கோடி விழுந்தது. இதில் வரி போக ரூ. 7 கோடியே 56 லட்சம் போருண்ண ராஜனுக்கு கிடைத்தது. லாட்டரியில் பரிசு விழுந்த பிறகும் போருண்ண ராஜன் தொடர்ந்து ரப்பர் அறுக்கும் வேலை செய்து வருகிறார்.
மேலும், தனக்கு லாட்டரியில் பரிசு விழ தன் வீட்டருகேயுள்ள முத்தப்பன் சாமிதான் காரணம் என்று குமார் கருதுகிறார். இதனால், முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்து கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசு தொகையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை ராஜன் ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து ராஜன் கூறுகையில், வங்கியின் நான் வாங்கியிருந்த கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன்.
எனது வீட்டை கூட பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த சமயத்தில்தான் கூத்துப்பரம்பா என்ற இடத்தில் வைத்து அந்த லாட்டரி சீட்டை வாங்கினேன்.
என் முத்தப்பன் அருளால் இக்கட்டான சூழலில் எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது. இதனால், முத்தப்பனுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது கோயிலை பெரிதாக கட்டி வருகிறேன்.
இந்த ஒற்றை லாட்டரியால் என் வாழ்க்கையே மாறிப் போனது என்கிறார்.
ராஜனுக்கு மனைவி மற்றும் இரு மகள்கள், மகன் உண்டு. மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. தற்போது, லாட்டரியில் விழுந்த பணத்தை கொண்டு புது வீடு கட்டி வருகிறார்.
முத்தப்பன் கோயிலை பெரிதாக கட்டும் பணிகளையும் ராஜன் மேற்கொண்டுள்ளார்.