பஞ்சாபில் இருந்து பீகார் செல்லும் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன, ரயில் மெதுவாகச் சென்றதால் பயணிகள் யாருக்கும் காயமில்லை
Published : Jan 18, 2021 4:14 PM
பஞ்சாபில் இருந்து பீகார் செல்லும் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன, ரயில் மெதுவாகச் சென்றதால் பயணிகள் யாருக்கும் காயமில்லை
Jan 18, 2021 4:14 PM
உத்தரப்பிரதேசம் லக்னோவில் சாகித் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து பீகாரின் ஜெய்நகருக்குச் சென்ற சாகித் விரைவு ரயில் லக்னோ சார்பாக் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்றுத் தொலைவு சென்றபோது 2 பெட்டிகள் தடம்புரண்டன.
ரயில் மெதுவாகச் சென்றதாலும், உடனடியாக நிறுத்தப்பட்டதாலும் பயணிகள் எவருக்கும் காயம் இல்லை. தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகளை மற்ற பெட்டிகளில் ஏற்றிய பின் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.