நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியினை ஒருநாள் இடைவெளிவிட்டு போட மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தற்போது வாரத்தில் 7 நாட்களில் போடுவதற்குப் பதிலாக, பெரிய மாநிலங்களில் வாரத்தில் 4நாட்களுக்கு மேல் தடுப்பூசி போடவும், சிறிய மாநிலங்களில் 4நாட்கள் மட்டும் தடுப்பூசி மையம் செயல்படவும், மத்திய அரசு, அறிவுறுத்தி உள்ளது.
ஒரு குப்பியில் உள்ள கொரோனா தடுப்பு மருந்தை 10 பேருக்கு ஊசி மூலம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி செலுத்தப்படும் பட்சத்தில், ஒரு குப்பியில் இருக்கும் மீதி மருந்து பயனற்றதாகி விடுகிறது. இதனால் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.