ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை விதிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பான மனுவில், அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகிகள் தேர்தல் நடத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்பதால் கட்சி விவகாரத்தில் தலையிட அவருக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.
இதனை ஏற்று, மனுதாரர் வழக்குத் தொடுக்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார். தேவைப்பட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என அறிவுறுத்தினார்.