​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்… திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சீரமைக்கப்படும்

Published : Jan 18, 2021 1:10 PM

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்… திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சீரமைக்கப்படும்

Jan 18, 2021 1:10 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீரமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் கும்மனூரில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இன்னும் நான்கே மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

மழைக் காலங்களில் தென் பெண்ணை ஆற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டி வரை கால்வாய் அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறினார்.

2011-ல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டிய அவர், அந்த திட்டத்தை திமுக தான் வேகப்படுத்தியது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய அவர், மக்களின் வரவேற்பை பார்க்கும் போது, 4 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்பது கண்கூடாக தெரிவதாக கூறினார்.