​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூர் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் அவலம் : சடலத்தின் மூக்கு பகுதி இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சி

Published : Jan 04, 2021 1:57 PM

திருவள்ளூர் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் அவலம் : சடலத்தின் மூக்கு பகுதி இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சி

Jan 04, 2021 1:57 PM

திருவள்ளூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் மூக்கு பகுதியை, ஊழியர்கள் அலட்சியத்தால் நாய் கடித்து விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெஞ்சுவலி காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த, எடலப்பாளையத்தை சேர்ந்த 33 வயது நோயாளியின் உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

சடலத்தை உறவினர்கள் பெற்றுக்கொண்டபோது உடலில் மூக்கு பகுதியை இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சவக்கிடங்கு ஊழியர்களிடம் கேட்டபோது, மூக்கை நாய் கடித்து விட்டதாக ஊழியர்கள் அலட்சியமாக தெரிவித்ததாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.