தமிழக சட்டப்பேரவை தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடரை கருத்தில்கொண்டு, 2 கட்டமாக சட்டமன்ற தேர்தலை நடத்த ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக தேர்தல் ஆணைய தலைமைக்கு எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இறுதி வாக்காளர் பட்டியல் திட்டமிட்டபடி வரும் 20ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கமாக தேர்தல் பணிகளில் 3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படும் நிலையில் வரும் தேர்தலில் நான்கு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் சத்யபிரதா சாஹு குறிப்பிட்டார்.