மணிப்பூரில் சூக்கோ பள்ளத்தாக்கில் பற்றியெரியும் காட்டுத்தீ - தீயைக் கட்டுப்படுத்த விமானப் படையின் 4 ஹெலிகாப்டர்கள் உதவி
Published : Jan 04, 2021 12:52 PM
மணிப்பூரில் சூக்கோ பள்ளத்தாக்கில் பற்றியெரியும் காட்டுத்தீ - தீயைக் கட்டுப்படுத்த விமானப் படையின் 4 ஹெலிகாப்டர்கள் உதவி
Jan 04, 2021 12:52 PM
மணிப்பூரில் சூக்கோ பள்ளத்தாக்கில் பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்க விமானப் படை ஹெலிகாப்டர்கள் உதவி செய்து வருகின்றன.
மணிப்பூர் - நாகலாந்து எல்லையில் சூக்கோ பள்ளத்தாக்கில் கடந்த வாரம் காட்டுத் தீ பற்றியது. 200 ஏக்கருக்கு மேலான பரப்பில் மரங்கள் செடிகொடிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 200 பேர் ஈடுபட்டுள்ள நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் மத்திய அரசின் உதவியை நாடினார்.
இதையடுத்து விமானப்படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவை ஏரிகளில் இருந்து மிகப்பெரிய வாளிகளில் தண்ணீரை எடுத்துச் சென்று தீப்பற்றி எரியும் மரங்களின் மீது ஊற்றித் தீயைக் கட்டுப்படுத்த உதவி வருகின்றன.