குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
Published : Jan 04, 2021 12:42 PM
குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
Jan 04, 2021 12:42 PM
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இன்று காலை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நிராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இருப்பினும், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.