​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இமாச்சல பிரதேசம் என்ஹெச்5 தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடக்கம்

Published : Jan 04, 2021 12:37 PM

இமாச்சல பிரதேசம் என்ஹெச்5 தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடக்கம்

Jan 04, 2021 12:37 PM

இமாச்சலப் பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் என்ஹெச்5 தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.

அப்பாதையில் சாலையின் இருமருங்கிலும் கடுங்குளிருக்கு இடையே வாகனங்கள் இரண்டாவது நாளாக காத்துக் கிடக்கின்றன.

இதனிடையே, கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு-காஷ்மீரில், உதம்பூர்-ஸ்ரீநகர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.