​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி

Published : Jan 04, 2021 12:30 PM

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி

Jan 04, 2021 12:30 PM

மாரடைப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் பிரதமர் மோடி போனில் நலம் விசாரித்தார்.

கங்குலியின் மனைவி டோனாவிடமும் பேசிய மோடி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார். கடந்த சனிக்கிழமை லேசான மாரடைப்புக்கு ஆளான கங்குலிக்கு, கொல்கத்தா மருத்துவமனையில் இதய தமனிகளில் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி நடத்தப்பட்டு, 3 அடைப்புகள் நீக்கப்பட்டன.

கங்குலி தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து  நாடு முழுவதும் இருந்து 10 இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இன்று முடிவு செய்ய உள்ளனர்.