கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்க சீரம் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி
Published : Jan 04, 2021 12:20 PM
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்க சீரம் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி
Jan 04, 2021 12:20 PM
கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை சீரம் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இன்று வழங்கினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் சேர்ந்து கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் உற்பத்திக்கான அனுமதியும் கிடைத்துள்ளதால், தடுப்பூசி தயாரிக்கும் பணியை சீரம் இந்தியா முடுக்கி விட்டுள்ளது.
முதல் 10 கோடி தடுப்பூசி டோசுகளை, டோசுக்கு தலா 200 ரூபாய் என்ற விலையில் அரசுக்கு விற்க சீரம் இந்தியா முன்வந்துள்ளது. ஓபன் மார்க்கெட்டில் விற்க அரசு அனுமதித்தால் டோஸ் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் விலை வசூலிக்கப்படும் என சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.