​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவு

Published : Jan 04, 2021 12:09 PM

திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவு

Jan 04, 2021 12:09 PM

திரையரங்குகள், மல்ட்டிபிளக்ஸ்களில் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதித்து திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு புதுப்படங்கள் வெளியாவதாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாலும், திரையரங்குகளில் இருக்கைகளில் முழுமையாகப் பார்வையாளர்களை அனுமதிக்க ஒப்புதல் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

நடிகர் விஜயும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். இந்நிலையில், திரையரங்குகள், மல்ட்டிபிளக்ஸ்களில் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதித்து, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.