ஜியார்ஜியா மாநிலத்தில் தாம் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர் டிரம்ப் பேசும் ஆடியோ டேப் வெளியாகி அமெரிக்காவில் அனலை பற்றவைத்துள்ளது.
ஜியார்ஜியாவில் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடனிடம் தோற்றதால் டிரம்ப் அந்த மாநிலத்தின் தேர்தல் வாக்குகளையும் இழந்தார்.
இந்த நிலையில் ஜியார்ஜியா மாநில அமைச்சர் ஒருவரிடம் போனில் பேசிய டிரம்ப் 11780 வாக்குகளை தயார் செய்து தாம் வெற்றி பெற்றதாக அறிவிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்பது போன்ற ஆடியோ டேப் அமெரிக்க ஊடகங்களில் வெளியானது.
அதற்கு அந்த அமைச்சர் பிராட் ராபென்ஸ்பெர்கர் (Brad Raffensperger) மறுப்பு தெரிவித்திருப்பதும் வெளியாகி உள்ளது.
ஒரு கட்டத்தில் கள்ள வாக்குகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தானதாக இருக்கும் என டிரம்ப் மிரட்டுவதும் ஆடியோ டேப்பில் இடம் பெற்றுள்ளது.