மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 14ஆம் தேதி சென்னை வருகை!
Published : Jan 04, 2021 11:39 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி சென்னைக்கு வர உள்ள நிலையில், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் துக்ளக் இதழின் 51ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அமித் ஷா பங்கேற்கிறார். அதன்பின் தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும், அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி உடன்பாடு எட்டப்படும் எனவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அமித் ஷாவின் சென்னை வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.