​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது

Published : Jan 04, 2021 11:17 AM

தமிழகத்தில் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது

Jan 04, 2021 11:17 AM

2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு சென்னை எழும்பூரிலுள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு திரும்ப கிடைத்த இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள் என மொத்தமாக 258 இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் எஞ்சிய 12 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நாளை முதல் 11-ம் தேதி வரை பொதுப்பிரிவினர் மற்றும் பட்டியிலன மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.