​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா சேமிக்கிறது-பிரதமர் மோடி

Published : Oct 26, 2020 8:28 PM

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா சேமிக்கிறது-பிரதமர் மோடி

Oct 26, 2020 8:28 PM

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மூலம் ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா சேமிக்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

எரிசக்தி தொடர்பான கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், இந்தியா தற்சார்பு நிலையை அடைவதில் எரிசக்தி பாதுகாப்பும் முக்கியமானது என்றார்.

இந்திய எரிசக்தி துறையானது வளர்ச்சியை மையமாக கொண்டு, தொழில்துறை, சுற்றறுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ற விதத்தில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் மின்னுற்பத்தியை அடைவதே இலக்கு என்றும், எண்ணெய் சுத்திகரிப்பு திறனை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 25 கோடி டன்னில் இருந்து 45 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.