மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, நான்காவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
சேனாபதி மாவட்டம் காங்கெம் தானா அருகில் கடந்த 23ம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இம்பால்-திமப்பூர் இடையிலான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
வானிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நான்காவது நாளாக இன்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.