​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா பரவலை குறைக்க ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனம்

Published : Oct 26, 2020 6:34 PM

கொரோனா பரவலை குறைக்க ஸ்பெயினில் அவசர நிலை பிரகடனம்

Oct 26, 2020 6:34 PM

ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவலை குறைக்க அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. அந்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இதையடுத்து அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.  அவசரகால நிலை மே மாத தொடக்கம் வரை நீடிக்கும் என்றும், கனாரி தீவை தவிர அனைத்து இடங்களுக்கும் அவசரநிலை பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.