சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்து காணப்பட்ட விமான நிலையத்தில், பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள விமான உணவகத்தால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அந்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானம் மூலம் வருமானம் ஈட்டவும், மக்களுக்கு புது அனுபவத்தை அளிக்கும் பொருட்டும் A380 ஜெட் விமானம், உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.