ஆஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடமும் நல்ல பலன் இருப்பதாக ஆய்வில் தகவல்
Published : Oct 26, 2020 2:50 PM
ஆஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடமும் நல்ல பலன் இருப்பதாக ஆய்வில் தகவல்
Oct 26, 2020 2:50 PM
ஆஸ்ட்ரோஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, வயதானவர்களிடமும் அதிக நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயாதானவர்களிடம் இந்த தடுப்பூசியை சோதித்த போது, பாதுகாப்பான ஆன்டிபாடீசும், T-செல்களும் உற்பத்தியானது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று 18 முதல் 55 வயது பிரிவினரிடமும் இதே போன்ற புதிய நோய் எதிர்ப்புத் திறன் உருவானதாக அறிக்கை கூறுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைகழக விஞ்ஞானிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை மீண்டும் துவங்கியது.