இந்தஸ்இந்த் வங்கியை கோடக் மஹிந்திரா வங்கி கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சொத்து மதிப்பு இழப்பு, டெபாசிட் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தஸ்இந்த் வங்கியின் சந்தை மதிப்பு 60 சதவிகிதம் சரிந்துள்ளது.
இந்த நிலையில் அந்த வங்கியின் அனைத்து பங்குகளையும் வாங்கி கோடக் மஹிந்திராவுடன் இணைக்க அதன் தலைவர் உதய் மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இணைப்பு நடந்தால் கோடக் மஹிந்திரா வங்கியின் சொத்து மதிப்பு 83 சதவிகிதம் அதிகரிப்பதுடன், அதன் அடிப்படையில் அது நாட்டின் எட்டாவது பெரிய வங்கியாகவும் மாறும் என சொல்லப்படுகிறது.
ஆனால் வங்கியை விற்கப்போவதாக வெளியான செய்திகளை வதந்தி என்று இந்தஸ்இந்த் வங்கி தரப்பு மறுத்துள்ளது.