நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேய்க்கு 3 ஆண்டு சிறை
Published : Oct 26, 2020 12:33 PM
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேய்க்கு 3 ஆண்டு சிறை
Oct 26, 2020 12:33 PM
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரேய்க்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
1999ல் வாஜ்பாய் தலைமையிலான அரசில், நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்த போது, ஜார்கண்டில் கிரிதி என்ற இடத்தில் உள்ள பிரம்மாதிஹா சுரங்கத்தை CTL என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கினார் என்பது வழக்கு. திலீப் ரேயுடன், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 2 பேருக்கும் 3 ஆண்டு தண்டனையும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.