7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய ஆளுநர் முயற்சி - மு.க.ஸ்டாலின்
Published : Oct 26, 2020 12:06 PM
7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய ஆளுநர் முயற்சி - மு.க.ஸ்டாலின்
Oct 26, 2020 12:06 PM
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு ஏழரை சதவீத உள்ஒதுக்கீட்டை நீர்த்து போக செய்ய வேண்டும் என்று ஆளுநர் முயற்சிப்பதாக என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு ஏழரை சதவீத உள்ஒதுக்கீடு மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் முடிவு எடுக்காதது ஏன் என்று வினவினார்.