மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
Published : Oct 26, 2020 10:51 AM
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
Oct 26, 2020 10:51 AM
அரசுப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், மருத்துவப்படிப்புக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கெட்டி செவியூர், அயலூர் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி வைத்த அவர், வெள்ளாளபாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத்தின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மேலும், சுமார் 86லட்ச ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.