பின்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் வானத்தில் உருவான வண்ணமயமான அற்புதக் கலவை பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்வதாய் இருந்தது.
ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கே உள்ள Utsjoki கிராமத்தின் மீது இரவு 10 மணி அளவில் இந்த அற்புத காட்சி உருவானது. வானம் முழுவதும் வெள்ளை மற்றும் ஊதா நிற கோடுகளுடன் கூடிய பெரிய பச்சை நிற மேகங்களால் போர்த்தப்பட்டிருந்தன.
aurora borealis என்று அழைக்கப்படும் இந்த வடக்கு விளக்குகள் பூமியின் வாயுத் துகள்கள் மற்றும் சூரியனின் வளிமண்டல பொருட்கள் இடையேயான மோதல்களின் விளைவாகும். இந்த மோதல்கள் பூமியின் வடக்கு மற்றும் தென் துருவங்களைச் சுற்றி உள்ள காந்த மண்டலங்களை வண்ணமயமான நீரோடைகளை வானத்தில் தெளிக்கும்.