​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் வீடு கட்டித் தரும் திட்டத்தில் முறைகேடு புகார் எதிரொலி... சி.பி.ஐ. விசாரணைக்கான பொது ஒப்புதலை ரத்து செய்ய மாநில அரசு திட்டம்

Published : Oct 26, 2020 7:47 AM

கேரளாவில் வீடு கட்டித் தரும் திட்டத்தில் முறைகேடு புகார் எதிரொலி... சி.பி.ஐ. விசாரணைக்கான பொது ஒப்புதலை ரத்து செய்ய மாநில அரசு திட்டம்

Oct 26, 2020 7:47 AM

மாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்ய கேரள அரசு ஆலோசித்து வருகிறது.

இதுதொடர்பாக பேசிய அம்மாநில சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன், அரசியல் லாபங்களுக்காகவும், அதிகார வரம்பு இல்லாத பிரச்சனைகளில் அந்த அமைப்பு தலையிடுவதாகவும், சிபிஐ மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறியுள்ளார்.

மாநில அரசின் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை, சிபிஐ விசாரிக்க தொடங்கியுள்ள நிலையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.