​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகை அருகே பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது... வனத்துறையினரின் நடவடிக்கையால் தமிழக- கேரள எல்லையில் நிம்மதி

Published : Oct 26, 2020 7:37 AM

உதகை அருகே பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது... வனத்துறையினரின் நடவடிக்கையால் தமிழக- கேரள எல்லையில் நிம்மதி

Oct 26, 2020 7:37 AM

தமிழக கேரள எல்லையில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா ஒட்டிய கேரள எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆடு மாடுகள் காணாமல் போவது தெரியவந்தது. மேலும் அப்பகுதிகளில் புலியின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால்,அதனைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

இந்நிலையில் நேற்று அந்தக் கூண்டில் பெண் புலி ஒன்று சிக்கியது. இதனையடுத்து புலியை புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்வதா என்பது குறித்து தேசிய புலிகள் ஆணையத்தின் தகவல் கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.