பாதாளச் சாக்கடை வழியாக வெளிவரும் நபர்களால் பரபரப்பு

0 4239

அமெரிக்கா - மெக்சிகோ எல்லை நகரில் சிலர் பாதாளச் சாக்கடை வழியாக வெளியே வரும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களை தடுக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கிடைக்கும் இடைவெளிகளில் புகுந்து ஊடுருவுபவர்கள் தொடர்பான தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் எல்லை நகரான எல்பாசோவில் ((El Paso)) பரபரப்பான சாலையில் பாதாளச் சாக்கடை வழியாக சிலர் வெளியேறுவது தொடர்பான காட்சி கார் ஒன்றில் இருந்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் சட்டவிரோதக் குடியேறிகளா என்றும் உறுதி செய்யப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT