Polimer News
இந்தியா

டிக் டாக் செயலி தரவிறக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

டிக் டாக் செயலி தரவிறக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

அந்த செயலியை தரவிறக்கம் செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டிக் டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

டிக் டாக் செயலி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒருதரப்பினர் வாதத்தை வைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

Related posts

Polimer News