Polimer News
சென்னை

இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து

சென்னை திருவான்மியூரில் உள்ள இந்தியன் வங்கியில்  இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

எல்பி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையிலிருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட ரோந்து போலீசார், உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 3

அதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வாகனம், மீட்பு குழு மற்றும் திருவான்மியூர் போலீசார் சிறிது நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை என தெரிவித்துள்ள போலீசார், சுவிட்ச்போர்டு தீப்பற்றி எரிந்ததில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

Polimer News