Polimer News
மாவட்டம்

14-வது மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞர் பலி

வீட்டின் சாவி தொலைந்த காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து கயிறு கட்டி 14 மாடியில் உள்ள தனது வீட்டிற்கு இறங்கிய இளைஞர் கயிறு அறுந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கத்தில் “துகார்” என்ற 14 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்துவந்த பீகாரை சேர்ந்த முகமது அப்ரிடி (muhammed afreedi) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டின் சாவி தொலைந்துபோனதால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவர் தவித்துள்ளார். அப்போது ஆபத்தை உணராமல் குடியிருப்பின் மொட்டைமாடியில் இருந்து, இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு 14வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே செல்ல அப்ரிடி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மாடிக்கு சென்று இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு அங்கிருந்து கீழே இறங்க ஆரம்பித்துள்ளார் அவர். இந்த முட்டாள்தனமான முயற்சியின்போது கயிறு அறுந்துள்ளது.

இதனால் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். சாவி தொலைந்து போனால் வேறு சாவியை ஏற்பாடு செய்து வீட்டுக்கு உள்ளே செல்லும் எளிமையான வழி இருக்கும் நிலையில் விபரீத முடிவால் இளைஞர் தனது உயிரை இழந்துள்ளார்.

Related posts

Polimer News