Polimer News
அரசியல் வீடியோ

மாப்பிள்ளை உடையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு இஸ்லாமிய மக்கள் மாப்பிள்ளைக்கு வரவேற்பு அளிப்பது போன்று வித்தியாசமான முறையில் வரவேற்பு அளித்தனர்.

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து பழைய வண்ணாரபேட்டையின் பல்வேறு இடங்களில் அமைச்சர் ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

பாண்டியன் திரையரங்கம் அருகில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வேட்பாளருக்கு இஸ்லாமிய மக்கள் தங்கள் வழக்கப்படி மாப்பிள்ளையை வரவேற்க அணிவிக்கும் “பத்தி ” மாலை மற்றும் தொப்பி அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்த அந்த அலங்காரத்துடன் ஜெயக்குமார் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய பூத் சிலிப் அ.ம.மு.க.வினரிடம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை கொடுப்பது போல் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதை போன்றே அரசியலிலும் செய்வதாகவும் அவரது டி.வி. உடைப்பது போன்ற விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகளும் டி.வியை உடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

Related posts

Polimer News