Polimer News
மாவட்டம்

85 வயதில் முதன்முறையாக வாக்களிக்கும் முதியவர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 85 வயதான முதியவர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளார்.

மருதநாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரும், இவருடைய குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தனர். கொத்தடிமையில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், 85 வயதான கன்னியப்பன், அவரது குடும்ப உறுப்பினர்கள் என 7 பேர் முதன்முறையாக இந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மருதநாடு கிராமத்துக்கு சென்று கன்னியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை உபயோகிப்பது குறித்து அவர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

Related posts

Polimer News