Polimer News
உலகம்

மோட்டார் ஷெல் வெடித்து 7 சிறுவர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை மோட்டார் ஷெல் குண்டு வெடித்ததில், 7 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

காபுலின் கிழக்கு பகுதியான லாக்மான் மாகாணத்தின் மெக்தர்லம் புறநகர் பகுதியில், நேற்று மாலை வீட்டு முன் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் ஷெல் குண்டு வெடித்தது.

இதில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 4 சிறுவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், காயமடைந்தவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு எங்கிருந்து குண்டு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

Polimer News