Polimer News
அரசியல் இந்தியா

எடியூரப்பா ஹெலிகாப்டரில் சோதனை…!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா செல்லவிருந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட எடியூரப்பா தயாரானார்.

அப்போது அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஹெலிகாப்டரை சோதனையிட்டனர்.

பின்னர் ஹெலிகாப்டரில் இருந்த உடைமைகளை வெளியில் எடுத்து சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர், எடியூரப்பா புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

Related posts

Polimer News