Polimer News
மாவட்டம்

குற்றவாளிக்கு மரண தண்டனை நிறுத்தி வைப்பு

தேனியில் காதலர்களைக் கொலை செய்தவனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. காதலனும் காதலியும்  சுருளி வனப்பகுதியில் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.

2011ஆம் ஆண்டில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்பவன் கைது செய்யப்பட்டான்.

பெண்ணை அவன் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவனுக்கு தேனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் இந்த தீர்ப்பை உறுதி செய்திருந்தது.

வரும் 22ஆம் தேதி அவன் தூக்கிலிடப்பட இருந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், திவாகருக்கான மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

Related posts

Polimer News