Polimer News
உலகம்

சீனாவின் இரண்டு போர் விமானங்கள் அத்துமீறல் என தைவான் புகார்

சீனாவின் இரண்டு ஜெட் போர் விமானங்கள் தாய்வானின் எல்லைக்குள் ஊடுருவியதாக அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது.

தாய்வான் மற்றும் சீனாவைப் பிரிக்கும் எல்லைப் பகுதியை தாண்டி ஜே 11 என்ற இரண்டு சீன போர் விமானங்கள் நேற்று காலை ஊடுருவியதாக தாய்வான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து தைவான் விமானப்படை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஊடுருவல், உள்நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட தூண்டுதல் என தாய்வான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த 2011ம் ஆண்டில் சீன விமானங்கள் எல்லைதாண்டியதால் இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்தது.

Related posts

Polimer News