டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி..!
Dec 30, 2022
7773
டாட்டா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் தனது 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளது.எஞ்சிய 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் தன்மையைப் பொறுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.மொத்தம் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தையொட்டிய ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் விரைவில் இ-பாஸ்போர்ட் சேவை
Jan 08, 2022
15196
நாட்டில் இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தேஜ் பாட்லா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், அதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார். இ-பாஸ்போர்ட்டானது முற்றிலும் காகிதமில்லா பாஸ்போர்ட்டாக இருக்காது என்று கூறிய அவர்,பாஸ்போர்ட்டில் விரைவில் மின்னணு ‘சிப்’ பொருத்தப்படவுள்ளது என்றார்.மக்களுக்கு பாஸ்போர்ட் சார்ந்த சேவைகளை இணையவழியில் வழங்குவதற்காக பாஸ்போர்ட் சேவை திட்டத்தை வெளியுறவு அமைச்சகம் டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிறது.
உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது டிசிஎஸ்
Oct 10, 2020
10386
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நேற்று அசென்ச்சர் நிறுவனத்தை முந்தி, உலகின் மிக மதிப்புமிக்க ஐ.டி நிறுவனமாக மாறியது.ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிறகு சர்வதேச அளவில் இந்த உச்சத்தை எட்டிய இரண்டாவது நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகும்.அக்டோபர் 8ஆம் தேதியின் தரவுகளின் படி,அசென்ச்சர் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 143.1 பில்லியன் டாலர்கள் ஆகும். அதே சமயம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 144.7 பில்லியனாக இருந்தது.
20,000 பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கிறது காக்னிசென்ட்
Feb 10, 2020
14701
பிரபல ஐ.டி. (IT) நிறுவனமான காக்னிசென்ட், (Cognizant) இந்த ஆண்டு 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதால், அவற்றை ஈடுகட்டும் வகையில் வழக்கத்தை விட 30 சதவிகிதத்திற்கும் அதிகமான பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தப் போவதாக காக்னிசென்ட்தெரிவித்துள்ளது.வளாக நேர்காணல் வழியாக தேர்வாகும் பட்டதாரிகளின் சம்பளத்தை 18 சதவிகிதம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு, வருடாந்திர சம்பளம் நான்கு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும். ஐ.டி. துறையில் (IT) கடந்த ஆண்டு நிலவரப்படி 2 லட்சம் பணியாளர்களுடன் காக்னிசென்ட் இரண்டாம் இடத்திலும், 4 புள்ளி 4 லட்சம் பணியாளர்களுடன் டிசிஎஸ் (TCS) முதல் இடத்திலும் உள்ளன
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News