3 கி.மீ. தூரமே உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல கட்டணம்.. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்
Nov 18, 2024
784
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரமே உள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் தங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்க மறுத்ததையடுத்து, உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தங்கரமேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்ததோடு, வழக்கறிஞர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
உளுந்தூர்ப்பேட்டையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- 14 பேர் காயம்
Sep 25, 2024
809
உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில் இன்று அதிகாலை சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த 6 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
Sep 23, 2024
663
போலி பதிவெண் மற்றும் உரிய பர்மிட், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இயக்கப்பட்ட வரதன் ஏர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவாடியில் பறிமுதல் செய்யப்பட்டது.மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து சுங்கக் கட்டணத்திற்காக நின்றபோது அந்த பேருந்தில் இருந்த ஃபாஸ்டேக் வேறு ஒரு பேருந்திலும் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்திற்கும், மோட்டார் வாகன ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.விசாரணையில், புதுச்சேரி பதிவெண் கொண்ட அப்பேருந்து, மற்றொரு ட்ராவல்ஸ் பேருந்தின் பதிவெண்ணை தவறாக பயன்படுத்தி ஓட்டி வந்ததும், சாலை வரி கட்டாமல் ஒரே பேருந்தின் ஆவணத்தை கொண்டு நான்கு பேருந்துகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி இயக்கி வந்ததும் அதன் மூலம் பல லட்சம் ரூபாயை வருவாய் ஈட்டிவந்ததும் தெரியவந்தாக கூறப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து... 15க்கும் அதிகமான பயணிகள் காயம்
Sep 11, 2024
689
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் விபத்துகளால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.பேருந்து மோதிய வேகத்தில் டேங்கர் லாரி சாலையின் மீடியனை தாண்டி, எதிர்புறத்திற்கு சென்றது. அப்போது, எதிர்திசையில் வந்த மினி லாரி மீது டேங்கர் லாரி மோதியது.விபத்தில் சிக்கிய மினி லாரியின் பின்னால் வந்த தனியார் சொகுசு பேருந்து அதன் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் சடன் பிரேக் அடித்து, இடதுபுறமாக திரும்பியபோது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், 2 பேருந்துகள், 2 லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு பேருந்துகளில் வந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
ஓசியில் டீ கேட்டு தகராறு.. கிளாசை கீழே போட்டு உடைத்து போதை இளைஞர்கள் அட்டூழியம்..!
Sep 01, 2024
572
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள டீக்கடைக்கு சனிக்கிழமை இரவு கஞ்சா போதையில் சென்ற இரண்டு இளைஞர்கள் ஓசியில் இஞ்சி டீ மற்றும் பூஸ்ட் போடச் சொல்லிக் கேட்டு தகராறு செய்த நிலையில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவன், டீ நிரம்பிய கிளாசை கீழே போட்டு, உடைத்து, கடை உரிமையாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டியுள்ளான்.
உளுந்தூர்பேட்டையில் நில அளவீடு செய்ய சென்ற வி.ஏ.ஓ.வை மிரட்டியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு
Jul 26, 2024
395
உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்கள் செல்லும் பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகார் குறித்து ஆய்வுக்கு சென்ற தங்களை சந்தோஷ் என்பவர் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப விவகாரத்தில் பஞ்சாயத்து விசிக பிரமுகர் உயிரோடு எரிப்பு பெட்ரோல் ஊற்றி தீவைத்த உறவினர்..!
Jul 01, 2024
800
உளுந்தூர் பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தில் நடத்தை சரியில்லை என்று மனைவியை பிரிந்து வாழ்ந்த உறவுக்கார இளைஞரை அழைத்து சேர்ந்து வாழுமாறு பஞ்சாயத்து பேசிய வி.சி.க பிரமுகரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உறவுக்காரரால் உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்டதால், உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடும் விசிக பிரமுகர் சூசை நாதன் இவர் தான்..!உளுந்தூர்பேட்டை அடுத்த எரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசை நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் மாவட்ட அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே குடும்பத்தினருடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த உறவுக்காரரான சின்னத்தம்பி என்பவர் இவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.உடல் முழுவதும் தீ பற்றிக் கொண்டதால் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடிய சூசை நாதனை உறவினர்கள் போர்வை மற்றும் வாலை இலைகளை போர்த்தி தீயை அணைத்தனர். அதற்குள்ளாக அவர் உடலில் பல இடங்கள் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக சின்னதம்பியை பிடித்து போலீசார் விசாரித்தனர். நடத்தை சரியில்லை எனக்கூறி சின்னத்தம்பி தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இந்த விவாகரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு இருவரையும் அழைத்து சூசை நாதன் பஞ்சாயத்து பேசியதாகவும் கூறப்படுகின்றது. மனைவிக்கு பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி சேர்ந்து வாழ மறுத்த சின்னத்தம்பியை, சூசை நாதன் தாக்கியதாக கூறப்படுகின்றது.அன்று முதல் சூசை நாதன் மீது சின்னத்தம்பி ஆத்திரத்தில் சுற்றியுள்ளான். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு சூசை நாதனை தேடி வீட்டுக்கு சென்றவனை, வீட்டில் இருந்தவர்கள் காலையில் வா என்று விரட்டி உள்ளனர். செல்வது போல அங்கிருந்து நகர்ந்தவன் இருட்டுக்குள் மறைந்திருந்ததாக கூறப்படுகின்றது . வீட்டின் வெளியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சூசைநாதன் மீது அதிகாலை 2:45 மணியளவில் தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை சூசை நாதன் மீது ஊற்றி லைட்டரால் தீவைத்ததாக சின்னத்தம்பி வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்கள் கண்ணீர் மல்க விவரித்தனர்குடும்ப விவகாரத்தில் பஞ்சாயத்து பேசியதால், உறவினரால் விசிக பிரமுகர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் விதிமுறைகளை மீறியதாக தலா ரூ.500 அபராதம்
May 24, 2024
295
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நின்று சோதனை நடத்திய போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி 5 அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். தடுப்புகளை அகற்றி விட்டு ஒருவழிப்பாதையில் இயங்கிய சுமார் 50 பல்வேறு வாகனங்களின் ஓட்டுநர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார், சீட் பெல்ட் அணியாமல் பேருந்து ஓட்டியதாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 500 ரூபாயை அபராதமாக விதித்தனர்.
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரங்களில் நெல், உளுந்து அறுவடை தீவிரம்..
Feb 05, 2024
423
விடுமுறை நாட்களை அடுத்து இன்று ஒரே நாளில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டதால், இட நெருக்கடி ஏற்பட்டு, அடுத்த 2 நாட்களுக்கு உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், கடந்த 2 வாரங்களாக நெல் மற்றும் உளுந்து அறுவடை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.தினமும் சுமார் 7 ஆயிரம் தானிய மூட்டைகள் வந்த நிலையில், இன்று மட்டுமே 12 ஆயிரம் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்ததால் ஏற்பட்ட இடநெருக்கடியை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்
Feb 04, 2024
1081
உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.ராஜதுரை என்ற இளைஞர் மைத்துனர் வஜ்ரவேல் என்பவர் துணையோடு கடந்த 22 ஆம் தேதி மாணவியை திருமணம் செய்து கொண்டார்.மாணவியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் திருச்செங்கோட்டில் சகோதரி வீட்டில் தங்கி இருந்த ராஜதுரை என்றும் அவரது மைத்துனர் வஜ்ரவேலையும் கைது செய்ததோடு அங்கிருந்த மாணவியை மீட்டு வந்தனர்

கோவிலில் பெண்களிடம் வம்பு.. நோயாளியின் மண்டை உடைப்பு.. போலீஸை மிரளவிட்ட போதையன்..! கேள்விக்குறியான பாதுகாப்பு
Dec 24, 2023
1080
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் விழாவில் பெண்களிடம் வம்பு செய்த கஞ்சா போதையன் ஒருவன் கழுத்தை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மண்டையை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுகழுத்தில் காயத்துடன் கோழி திருடன் போல விழித்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் இவர் தான் கஞ்சா குடிக்கி போதை இளைஞர்..!கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை ராஜநாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் போதையில் பெண்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசாரும் அந்த இளைஞரை பிடிக்க முயன்ற பொழுது, போதை இளைஞர் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு போதை இளைஞருக்கு கழுத்தில் 11 தையல் போடப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மருத்துவர் மற்றும் போலீசார் விசாரணை நடத்திய பொழுது அந்த இளைஞர் தனது பெயர் மற்றும் ஊர் குறித்த விபரங்களை கூற மறுத்து விட்டான்.போலீசார் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட போதையன், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் என்ற முதியவரையும் தூக்கிபோட்டு கடுமையாக தாக்கினான்.அதில் முதியவர் சீனிவாசனின் மண்டை உடைந்தது அப்போது மருத்துவமனையில் இருந்தவர்கள் திடீரென அச்சமடைந்து அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தனர். முதியவர் சீனிவாசனுடன் இருந்த அவரது மருமகன் ஐயப்பன் மற்றும் மகள் ஆகியோர் இரவு உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்று வருவதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டதுஇந்த சம்பவம் நடந்த நிலையில் சீனிவாசனை தாக்கிய போதை இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை புற காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லை என்றும் தாக்குதல் சம்பவத்தை மருத்துவமனை ஊழியர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்நோயாளிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து போதை இளைஞர் போலீஸ் பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.கஞ்சா மற்றும் மது போதையால் உந்தப்பட்டு சிலர் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுவதால் கஞ்சா விற்பனையை போலீசார் இருப்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க நகை கொள்ளை..!!
Nov 29, 2023
889
உளுந்தூர்பேட்டை அருகே மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதது குறித்து விசாரணை நடத்த வந்த அரசு அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.எறையூரை சேர்ந்த சரோஜா என்பவரின் வீட்டிற்கு வந்த இருவர், உரிமைத் தொகைக்காக போட்டோ எடுப்பதற்காக நகைகளை கழற்றி வைக்குமாறு கூறி, அவரின் கவனத்தை திசைத்திருப்பி நகைகளுடன் தப்பியுள்ளனர்.இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில், கைவரிசை காட்டியவர்களின் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு எலவனாசூர்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன், ஷாஜகான் ஆகியோர் சிக்கினர்.
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News